நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, லோக்சபா தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கும் நோக்கத்துடன், 26 கட்சிகள் இணைந்து உருவாகியுள்ள கூட்டணியின் பெயர் என்ன?அ. பாரதம்ஆ. இந்தியாஇ. தேசியம்ஈ. லோக்2. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், 'சந்திரயான் - 3' திட்ட இயக்குனரான வீரமுத்துவேல், தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?அ. விழுப்புரம்ஆ. நாமக்கல்இ. சேலம்ஈ. ஈரோடு3. அமெரிக்க முன்னாள் அதிபரான யாருக்கு ஆலோசனை வழங்கிய, தேர்தல் வியூக நிபுணர் ஸ்டெப்னி கட்டர், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு, அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட் டுள்ளார்?அ. பில் கிளிண்டன்ஆ. டொனால்டு டிரம்ப்இ. ஜார்ஜ் புஷ்ஈ. பராக் ஒபாமா4. நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும், மத்திய அரசு திட்டத்தின் பெயர் என்ன?அ. சரோவர் அம்ரித்ஆ. அம்ரித் சரோவர் இ. சரோவர்ஈ. அம்ரித்5. தூத்துக்குடி மாவட்டத்தின் எந்தப் பகுதியில், தலா 660 மெகாவாட் திறனில், இரு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தை, தமிழக மின்வாரியம் அமைக்கிறது? அ. உடன்குடிஆ. திருச்செந்தூர்இ. விளாத்திகுளம்ஈ. கோவில்பட்டி6. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுக்கு,கடந்த ஐந்து ஆண்டுகள் விண்ணப்பித்த வர்களில், தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?அ. முதலாவதுஆ. இரண்டாவதுஇ. மூன்றாவதுஈ. நான்காவது7. சென்னை ஐ.சி.எப். ஆலையில் இதுவரை, 31 வந்தே பாரத் ரயில்கள், வெள்ளை மற்றும் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு எந்த நிறத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது?அ. பச்சைஆ. சிவப்புஇ. ஆரஞ்சுஈ. கறுப்பு8. ஜோர்டானில் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, 20 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளவர்?அ. பிரியாஆ. அனிதாஇ. சிந்துஜாஈ. சினேகா விடைகள்::1. ஆ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. அ, 6. இ, 7. இ, 8. அ.