உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. தமிழகத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலைச் சிற்றுண்டித் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது?அ. ஆந்திரம்ஆ. கர்நாடகம்இ. தெலங்கானாஈ. கேரளம்2. 'ஜி--20' நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் பங்கேற்கும், சர்வதேச அளவிலான பார்லி. உச்சி மாநாடு, சமீபத்தில் புதுடில்லியில் நடந்தது. இந்த மாநாட்டின் பெயர் என்ன?அ. பி-20ஆ. சி-20இ. இ-20ஈ. டி-203. இந்தியாவைத் தவிர, உலகிலேயே மிகப்பெரிய ஹிந்துக் கோவில், எந்த நாட்டில் அமைக்கப்பட்டு உள்ளது?அ. அங்கோர் வாட், கம்போடியாஆ. நியூஜெர்சி, அமெரிக்காஇ. மெல்போர்ன், ஆஸ்திரேலியாஈ. பாலி, இந்தோனேசியா4. இந்தியாவில், பாக்கெட்டுகளில் அடைத்து லேபிளுடன் விற்பனை செய்யப்படும் சிறுதானிய மாவுகளுக்கு, ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்திலிருந்து, எவ்வளவு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது?அ. 5ஆ. 15இ. 10ஈ. 85. தமிழகத்தின் மாநில விலங்கான எந்த இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், ரூ. 25.14 கோடி மதிப்பிலான திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது?அ.வேடந்தாங்கல் பறவைஆ. முண்டந்துறை புலிஇ. முதுமலை யானைஈ. நீலகிரி வரையாடு6. மத்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் வாயிலாக, நாகப்பட்டினம் துறைமுகம் -- இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இடையே, பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதற்கான கட்டணம் எவ்வளவு?அ. ரூ.8,500ஆ. ரூ.7,670இ. ரூ.10,500ஈ. ரூ.5,5987. மருத்துவக் குணமும், தனித்துவமான இனிப்புச் சுவையும் கொண்ட எந்தத் தமிழக உணவுப் பொருளுக்கு, சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?அ. மதுரை ஜிகர்தண்டாஆ. தூத்துக்குடிமக்ரூன்இ. உடன்குடி பனங்கருப்பட்டிஈ. பண்ருட்டி பலாப்பழம்8. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆறு தங்கம் உட்பட, மொத்தம் எத்தனை பதக்கங்களை, இந்தியா முதன்முறையாக வென்று, புதிய வரலாறு படைத்துள்ளது?அ. 99ஆ. 100இ. 105ஈ. 107விடைகள்: 1. இ, 2. அ, 3. ஆ, 4. அ, 5. ஈ, 6. ஆ, 7. இ, 8. ஈ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !