உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தர வரிசையில், இந்திய அளவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், தற்போது எந்த நிலைக்கு முன்னேறி, 'லீடர்' தகுதியைப் பெற்றுள்ளது?அ. ஒன்றாம்ஆ. இரண்டாம்இ. மூன்றாம்ஈ. நான்காம்2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது?அ. மத்திய பிரதேசம்ஆ. அருணாசல பிரதேசம்இ. உத்தர பிரதேசம்ஈ. ஹிமாச்சல பிரதேசம்3. தமிழகத் தொழில்துறை அமைச்சர் ராஜாவின் மகள் நிலா, டில்லியில் நடந்த, தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டி ஜூனியர் பெண்கள் பிரிவில், எத்தனையாவது முறையாக தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்?அ. முதலாவதுஆ. இரண்டாவதுஇ. மூன்றாவதுஈ. நான்காவது4. 'ஒரு சில விஷயங்களில் அரசின் தலையீடு இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்' என சமீபத்தில் பேசியவர்?அ. டி.ஒய்.சந்திரசூட்ஆ. ராகுல்இ. திரெளபதி முர்முஈ. பிரியங்கா5. சமீபத்தில் நடந்த, ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில், மொத்தம் எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாயின?அ. 70ஆ. 78இ. 68ஈ. 656. பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்க, 'ஆக்மி' நிறுவனத்திற்கு, தூத்துக்குடி துறைமுகம் அருகே, எவ்வளவு ஏக்கர் நிலத்தை, தமிழக மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது?அ. 250ஆ. 220இ. 300ஈ. 3207. பாரா வில்வித்தை காம்பவுண்டு பிரிவு தர வரிசையில் உலகின் நம்பர்- 1 வீராங்கனையாக இடம் பிடித்துள்ளவர்?அ. ராணி ஷீத்தல்ஆ. ஷீத்தல் தேவிஇ. பிரியா பவானிஈ. நேத்ரா 8. சீனாவின் மிகப்பெரிய தனியார் குழுமங்களில் ஒன்றான எந்த நிறுவனம், ரூ.5.31 லட்சம் கோடி கடன்களுடன் திவாலாகி உள்ளதாக அறிவித்துள்ளது?அ. சாங்க்ஷி என்டர்பிரைஸ்ஆ. அலிபாபா குழுஇ. அமோய்ஈ. சினோபெக் குழுவிடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. இ, 6. ஆ, ௭. ஆ. 8. அ,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !