உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு, மகப்பேறு விடுப்பு வழங்குதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, எந்த மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது?அ. தமிழகம்ஆ. ஒடிசா இ. குஜராத்ஈ. தெலங்கானா2. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் புதிதாகப் பதவியேற்று உள்ளவர்?அ. எச்.பரத்வாஜ்ஆ. எம்.கேசவன்இ. கே.ஆர்.ஸ்ரீராம்ஈ. வி.என்.பார்த்தசாரதி3. லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது, நீண்ட காலமாகத் தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவரான யாரை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கிக் கொன்றது?அ. ஹசன் நஸ்ரல்லா ஆ. முகம்மது யூசுப்இ. சல்மான் மாலிக்ஈ. ைஹதர் அலி4. உலகில் உள்ள எந்த நாட்டில், எரியூட்டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் ரூ.377 கோடி வருவாய் கிடைத்துள்ளது?அ. சீனா ஆ. தென் கொரியாஇ. ஜப்பான்ஈ. ரஷ்யா5. பாலிவுட் திரையுலகில், 1980களில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகருக்கு, திரைத்துறையின் உயரிய விருதான, 'தாதா சாேஹப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது?அ. நஸ்ருதீன் ஷாஆ. ஓம் பூரிஇ. ராஜ்கபூர்ஈ. மிதுன் சக்கரவர்த்தி6. அதிக அளவிலான தொழிற்சாலைகள், அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது ஆகியவற்றில், இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?அ. அசாம்ஆ. மஹாராஷ்டிரம்இ. தமிழகம்ஈ. ஆந்திரம்7. ஆசிய நாடான ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?அ. ஷிகேரு இஷிபா ஆ. ஃபியூமியோ கிஷிடாஇ. ஷின்சோ அபேஈ. யோஷிஹிடே சுகா8. பீஹாரில் நடந்த இந்தியன் ஓபன் தடகளம் போட்டியில், பெண்களுக்கான உயரம் தாண்டுதலில், அதிகபட்சம் 1.76 மீ. உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை?அ. கனிகாஆ. கோபிகா இ. அனாமிகாஈ. தாருனிகாவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. இ, 7. அ, 8. ஆ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !