உள்ளூர் செய்திகள்

அறிவியல் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு

புக்ஸ் ஃபார் சில்டரன் மேலாளர் க. நாகராஜன் பேட்டி:புக்ஸ் ஃபார் சில்ரன் எப்போது தொடங்கப்பட்டது?2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.முதலில் வெளியிட்ட நூல் என்ன?ஆயிஷா இரா. நடராசன் மொழிபெயர்த்து வெளியான சிறுவர் கதைகள் அடங்கிய, 'நீ எறும்புகளை நேசிக்கிறாயா?' என்பதுதான் முதல் புத்தகம்.எந்த வகையான நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன?சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகங்களும், கதைகளுமே விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன. குறிப்பாக, இரா.நடராசனின் அறிவியல் சார்ந்த எல்லாப் புத்தகங்களும் நன்கு விற்பனையாகின்றன. பல பதிப்புகள் கண்டுள்ளன.வரும் ஆண்டில் என்ன திட்டம்?டீன் ஏஜ் பருவத்தினருக்கான புத்தகங்களில் கவனம் செலுத்தப் போகிறோம். பென்குயின் பதிப்பகத்தின் ப்ஃபின் புக்ஸ் (Puffin Books) வெளியிட்டுள்ள இளையோர் நூல்களை தமிழில் வெளியிட உடன்பாடு செய்திருக்கிறோம். இதுபோல இன்னும் பல பதிப்பங்களுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம்.எத்தனை நூல்களை பதிப்பித்துள்ளீர்கள்?இதுவரை சுமார் 750 நூல்களை பதிப்பித்துள்ளோம்.முகவரி: புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை -- 600018. தொலைபேசி: 044 2433 2924 இணையதளம்: https://thamizhbooks.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !