தேதி சொல்லும் சேதி
மே 29, 1917 - ஜான் எஃப். கென்னடி பிறந்த நாள்அமெரிக்காவின் 35வது அதிபர். மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தார். போரில் வென்றதற்காக அல்லாமல், போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டார். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மே 29, 2001 - ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி பேணுவோர் நாள்யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதிக் காப்பாளர்களை ஐ.நா. சபை தேர்ந்தெடுக்கிறது. அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரைக் கௌரவிக்கவும், உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும், இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.ஜூன் 1, 2012 - உலக பெற்றோர் நாள்சுயநலம் இல்லாமல், தியாக உணர்வுடன் பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களைக் கௌரவிக்கவும், அவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றவும், ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.ஜூன் 2, 2014 - தெலங்கானா நாள்இந்தியாவின் 29வது மாநிலம். இதற்கு முன் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தெலங்கானா என்பதற்கு, 'தெலுங்கர்களின் நாடு' எனப் பொருள். ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது. ஜூன் 3, 1986 - ரஃபேல் நடால் பிறந்த நாள்உலக அளவில் நான்காம் தரவரிசையிலுள்ள ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர். பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், யு.எஸ்.ஓபன், விம்பிள்டன் என, 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். 2008 ஒலிம்பிக்கில், தங்கம் வென்றார். 'களிமண் தரை ஆடுகளத்தின் ராஜா' என்று புகழப்படுகிறார்.ஜூன் 3, 1924 - மு. கருணாநிதி பிறந்த நாள்தமிழகத்தின் முன்னாள் முதல்வர். ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்திருக்கிறார். மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.