உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

மார்ச் 26, 1973 - லாரி பேஜ் பிறந்த நாள்இணையதள தேடு பொறிகளில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர். 2014ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராக, 'பார்ச்சூன்' இதழால் தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்எக்ஸ் (X) கதிர்களைக் கண்டறிந்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். அவரது பெயரால் தனிம அட்டவணையில் 111வது தனிமமாக ரான்ட்ஜனியம் இருக்கிறது.மார்ச் 27, 1961 - சர்வதேச நாடகக்கலை நாள்1948இல் உருவாக்கப்பட்ட, சர்வதேச நாடக்கலை நிறுவனம் (ITI), பல்வேறு நாடக நிகழ்வுகளை நடத்தி வருகிறது. யுனெஸ்கோ மற்றும் கலாசாரத் துறையின் சார்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஏப்ரல் 1, 1508 - முட்டாள்கள் நாள்ஏப்ரல் 1க்குப் பதில், ஜனவரி 1 என புதிய ஆண்டு முறை நடைமுறைக்கு வந்தது. இதை அறியாமல் ஏப்ரல் 1இல் புத்தாண்டு கொண்டாடியவர்களைக் கேலி செய்ய இந்த நாள் பிறந்தது.ஏப்ரல் 1, 1940 - வங்காரி மாதாய் பிறந்த நாள்கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர். சுற்றுச்சூழல் பணிக்காக 1991இல் கோல்டுமேன் விருதையும், 2004இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.ஏப்ரல் 1, 1937 - முகமது அமித் அன்சாரி பிறந்த நாள்அரசியல் நிபுணர், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் கலைக்கழக உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 2007 முதல் 2017 வரை இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !