உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

மே 7, 1861 - ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்வங்காள மொழிக் கவிஞர். இந்தியா, வங்கதேசத்தின் தேசியகீதங்கள் இவரால் எழுதப்பட்டவை. 'கீதாஞ்சலி' கவிதை தொகுப்பிற்காக 1913இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.மே 8, 1828 - ஹென்றி டியூனான்ட் பிறந்த நாள்போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கினார். இவரது பிறந்த நாள் உலக செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1901இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்றார். மே 9, 1866 - கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். மகாத்மா காந்தியின் அரசியல் குரு. நாடு சுதந்திரம் பெறுவதைவிட அதன் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை காட்டினார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். மே 11, 1998 - தேசிய தொழில் நுட்ப நாள் - இந்தியாபொக்ரான் அணுகுண்டு சோதனையை நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.மே 12, 1820 - ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் இத்தாலியில் பிறந்தார். செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை புரிந்த இவரைக் கௌரவிக்க, சர்வதேச செவிலியர் நாள் இதே நாளில் கொண்டாடப்படுகிறது. மே 13, 1918 - பாலசரஸ்வதி பிறந்த நாள்பரதநாட்டியக் கலைஞர். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரதக் கலையைப் பரப்பினார். 'உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்' என்று போற்றப்பட்டார். 'பத்ம விபூஷன்' விருது பெற்றிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !