தேதி சொல்லும் சேதி
ஜூலை 31, 1966 - ஜே.கே.ரௌலிங் பிறந்த நாள்இங்கிலாந்து எழுத்தாளர். ஹாரி பாட்டர் எனும் புதினத்தை எழுதியதன் மூலம், உலகப்புகழ் பெற்றார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் வெளிவந்தன.ஆகஸ்ட் 1, 1991 - சர்வதேச தாய்ப்பால் நாள்குழந்தைக்கான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியாகவும் இருக்கிறது. இதன் அவசியத்தை வலியுறுத்தி, உலக சுகாதார நிறுவனத்தால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 2, 1876 - பிங்கலி வெங்கையா பிறந்த நாள்மதங்கள் குறித்த நிறங்களை உணர்வுகளின் குறியீடுகளாக்கி, மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படி தேசியக் கொடியை வடிவமைத்தார். இவரது நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 4, 1961 - பராக் ஒபாமா பிறந்த நாள்அமெரிக்காவுக்கான 44வது அதிபர். ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதல் அதிபரும் கூட. 2009 முதல் 2017 வரை அதிபராக இருந்தார். அமைதிக்கான நோபல் பரிசை 2009இல் பெற்றார். ஆகஸ்ட் 5, 1930 - நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்விண்வெளிப் பொறியியலாளர், கடற்படை விமானி, பேராசிரியர். நிலவில் முதன்முதலாகத் தரையிறங்கினார். இவரது வாழ்க்கை வரலாற்று நூல் 'First Man: The Life of Neil A. Armstrong' 2005இல் வெளிவந்தது. ஆகஸ்ட் 5, 1905 - ராஜா சர் முத்தையா பிறந்த நாள்அரசியல்வாதி, சமூக சேவகர். சென்னை மேயராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி, மருத்துவம், சுங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.