உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஆகஸ்ட் 6, 1945 - ஹிரோஷிமா நாள் இரண்டாம் உலகப் போரில், ஹிரோஷிமா (ஜப்பான்) மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதை நினைவுகூரவும், அணுகுண்டின் ஆபத்துகளை உலகுக்கு உணர்த்தவும், இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6, 1881 - அலெக்சாண்டர் ஃப்ளமிங் பிறந்த நாள்பல்வேறு வகையான நோய்களுக்கு எதிர்ப்பு மருந்தாக இருக்கும் பென்சிலினைக் கண்டுபிடித்தார். மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, 1944இல் 'சர்' பட்டமும், 1945இல் நோபல் பரிசும் பெற்றார். ஆகஸ்ட் 8, 1942 - வெள்ளையனே வெளியேறு தினம்பிரிட்டிஷ் அரசை அடிபணிய வைக்க காந்திஜி தலைமையில் நடந்த பெரும் போராட்ட இயக்கம். 'ஆகஸ்ட் புரட்சி' எனப்படும் இந்த இயக்கம் சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது. ஆகஸ்ட் 10, 1894 - வி.வி.கிரி பிறந்த நாள் இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர். 1967இல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவரால் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன. 1975இல் 'பாரத ரத்னா' விருது பெற்றார்.ஆகஸ்ட் 12, 1892 - எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்இந்திய நூலக அறிவியலின் தந்தை. நூலக நிர்வாகம் தொடர்பாக 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, இந்த நாள் தேசிய நூலகர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.ஆகஸ்ட் 12, 1919 - விக்ரம் சாராபாய் பிறந்த நாள்இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை. இஸ்ரோ ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருந்து, ராக்கெட் வடிவமைக்கும் திட்டங்களை வகுத்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதள நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !