தேதி சொல்லும் சேதி
அக்டோபர் 29, 1985 - விஜேந்தர் சிங் பிறந்த நாள்இந்தியக் குத்துச்சண்டை வீரர். ஒலிம்பிக்கில் பதக்கம் (பெய்ஜிங், 2008 வெண்கலம்) பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை உடையவர். இந்தச் சாதனைக்காக, 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெற்றார்.அக்டோபர் 30, 1909 - ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் இந்திய அணுவியல் துறையின் தந்தை. காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார். அணுசக்தி ஆணையம், அணுசக்தித் துறை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அக்டோபர் 31, 1924 - உலக சிக்கன நாள்எதிர்கால வாழ்வு ஒளி மயமாகவும் சேமிப்பு, சிக்கனத்தின் அவசியத்தை நாம் எல்லோரும் உணரவும், உலகச் சிக்கனப் பேரவையால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.நவம்பர் 3, 1933 - அமார்த்தியா சென் பிறந்த நாள் இந்தியப் பொருளாதார அறிஞர். 1998இல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார். மனிதநேயம், சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் சேவைகள் செய்தார். 1999இல் இவருக்குப் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.நவம்பர் 4, 1897 - ஜானகி அம்மாள் பிறந்த நாள் மரபினக் கலப்பு ஆராய்ச்சி செய்த இந்தியத் தாவரவியல் நிபுணர். சிரில் டார்லிங்டன் உடன் இணைந்து, 'தாவர குரோமோசோம் அட்லஸ்' வரைபடத் தொகுப்பை வெளியிட்டார். 1977இல், 'பத்மஸ்ரீ' விருது பெற்றார். நவம்பர் 4, 1929 - சகுந்தலாதேவி பிறந்த நாள்இந்தியக் கணிதமேதை. 'மனித கம்ப்யூட்டர்' என அழைக்கப்பட்டார். மின்னல் வேகத்தில் கணிதக் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமையுடன் கின்னஸில் இடம் பெற்றார்.