உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

பிப்ரவரி 11, 1847 - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்1093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். மின்சார பல்பு, ஜெனரேட்டர், டெலிகிராஃப், கிராமஃபோன், ஒலிபெருக்கி போன்றவை எடிசனின் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்இங்கிலாந்து நாட்டின் இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைத் தந்து, 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நூலை 1859இல் வெளியிட்டார். பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்அமெரிக்காவின் 16வது அதிபர். அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, நேர்மையான செயற்பாடுகளால் புகழ் பெற்றார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிக்கும் விடுதலைப் பிரகடனத்தை 1863இல் வெளியிட்டார்.பிப்ரவரி 13, 1879 - சரோஜினி நாயுடு பிறந்த நாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, 'கவிக்குயில்' என்று புகழப்பட்ட கவிஞர். சுதந்திரத்துக்குப் பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு, 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமையையும் பெற்றார்.பிப்ரவரி 13, 2012 - உலக வானொலி நாள்வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலிகள் மூலம் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஐ.நா.வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக வானொலி நாளை அறிவித்தது.பிப்ரவரி 15, 1564 - கலீலியோ கலிலி பிறந்த நாள்இத்தாலி நாட்டு கணிதவியலாளர், பொறியாளர். நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை. 'பூமி சூரியனைச் சுற்றுகிறது' என்று துணிச்சலாக, தான் கண்டறிந்த உண்மையை ஆய்வுகள் மூலம் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !