தேதி சொல்லும் சேதி!
பிப்ரவரி 18, 1745 - அலெசாண்ட்ரோ வோல்ட்டா பிறந்த நாள்மின்துறை உருவாகக் காரணமான இத்தாலி நாட்டு இயற்பியலாளர். மின் அழுத்த அலகு, 'வோல்ட்' எனவும், மின் அழுத்தத்தை அளக்கும் கருவி 'வோல்ட்மீட்டர்' எனவும் இவர் பெயரில் குறிக்கப்படுகிறது. மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவரும் இவரே.பிப்ரவரி 18, 1926 - வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள்தமிழ் மொழியியல் அறிஞர், ஆய்வாளர். பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி இருக்கிறார். 'புறநானூற்றுச் சொல்லடைவுகள்' என்ற இவரது ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 19, 1855 - உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள்'தமிழ்த் தாத்தா' என்று கொண்டாடப்படும் அறிஞர். பழந்தமிழ் ஏடுகளைச் சேகரித்துப் பதிப்பித்தார். அதற்காக 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் அரும்பாடுபட்டுச் சேகரித்தார்.பிப்ரவரி 22, 1857 - பேடன் பவல் பிறந்த நாள்இங்கிலாந்து இராணுவத்தின் படைத் தளபதி. இராணுவ அனுபவங்களால், 20 மாணவர்களைக் கொண்டு சாரணர் இயக்கத்தை உருவாக்கினார். 'ஸ்கௌட்டிங் ஃபார் பாய்ஸ்' (Scouting for Boys) என்ற நூலை எழுதியுள்ளார். பிப்ரவரி 22, 1898 - தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள்ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, 16 வயதிலேயே உயிர் நீத்த இளம் இந்திய வீராங்கனை. 'முதன் முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர் இவர் தான்' என்று மகாத்மா காந்தி வள்ளியம்மைக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.பிப்ரவரி 24, 1955 - ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள்டெக் துறையின் தீர்க்கதரிசி. ஆப்பிள் நிறுவனர்களின் ஒருவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். ஆப்பிளில் பல நவீன சாதனங்கள் உருவாக வழிகாட்டியவர்.