உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஜூன் 17, 1973 லியாண்டர் பயஸ் பிறந்த நாள் - இந்திய டென்னிஸ் வீரர். 1996 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வாங்கினார். கேல் ரத்னா, அர்ஜுனா, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.ஜூன் 18, 1908 கக்கன் பிறந்த நாள் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தலைசிறந்த அரசியல்வாதியாகவும் நேர்மையின் வடிவமாகவும் திகழ்ந்தார். இந்திய அரசு இவரைச் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. ஜூன் 19, 1945 ஆங் சான் சூச்சி பிறந்த நாள் - மியான்மர் மக்களின் நலனுக்காக, அகிம்சை வழியில் போராடி 'ஜனநாயக லீக்' கட்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்து 2010இல் விடுதலை ஆனார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். ஜூன் 21, 1987 பன்னாட்டு யோகா நாள் - உடல் நலம் தரும் யோகா இந்தியாவில் தோன்றிய ஒரு கலை. இதன் மரபுகள் இந்து, புத்த, சமண மதங்களில் காணப்படுகின்றன. சர்வதேச யோகா கூட்டமைப்பு இந்த நாளைக் கொண்டாடுகிறது.ஜூன் 21, 1982 உலக இசை நாள் - அடுத்த தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும் இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டவும் இந்த நாள் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.ஜூன் 23, 2003 ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை நாள் - பிறருக்குச் செய்யும் சேவையே நல்லொழுக்கத்தின் அடையாளம். இதை ஊக்குவிக்கவும் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கவும் ஐ.நா. சபையால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !