உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி!

அக்டோபர் 8, 1932 - இந்திய- விமானப்படை நாள்உலகின் நான்காவது பெரிய விமானப்படை இந்தியாவுடையது. போரில் ஈடுபடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதிலும் விமானப்படை வீரர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் தியாகங்களை நினைவுகூர இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அக்டோபர் 8, 1935 - மில்கா சிங் பிறந்த நாள்இந்தியத் தடகள விளையாட்டு வீரர். 'பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். 1958ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அக்டோபர் 9, 1874 - உலக அஞ்சல் நாள்இன்று டிஜிட்டலில் தகவல்கள் பகிரப்பட்டாலும், கடிதம் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. உலக தபால் சங்கம் தொடங்கப்பட்ட தினத்தைக் கொண்டாட இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் நாள் அக்டோபர் 10இல் கொண்டாடப்படுகிறது.அக்டோபர் 10, 1906 - ஆர்.கே.நாராயண் பிறந்த நாள்இந்திய இலக்கியத்துக்கு உலக அளவில் புகழ் தேடித் தந்தார். நாவல்களில் இந்தியக் கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் என, அனைத்தையும் பதிவு செய்தார். கார்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண் இவரது சகோதரர். அக்டோபர் 11, 2011 - சர்வதேச பெண் குழந்தைகள் நாள்இந்தச் சமூகத்தில் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவையும் மறுக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஐ.நா. சபை இந்த நாளைக் கொண்டாடுகிறது.அக்டோபர் 12, 1891 - ச.வையாபுரிப் பிள்ளை பிறந்த நாள்தமிழ்ப் பேரறிஞர்; இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, நூல் பதிப்பு, அகராதி தொகுப்பு என்ற நான்கு துறைகளிலும் புகழ் பெற்றவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !