தேதி சொல்லும் சேதி
நவம்பர் 11, 1898 - கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்தமிழ்மொழியின் உயர்விற்காகப் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது.நவம்பர் 12, 1896 - சலீம் அலி பிறந்த நாள்பறவைகள் ஆராய்ச்சியாளர். தேசிய அளவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதில் இவரது தொண்டு மகத்தானது. 'பறவைகள் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று புகழப்பட்டார்.நவம்பர் 14, 1889 - ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். 1947 முதல் தன் வாழ்நாளின் கடைசியான 1964 வரை பிரதமராகப் பணியாற்றினார். இவர் பிறந்த நாள் தேசியக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.நவம்பர் 15, 1986 - சானியா மிர்சா பிறந்த நாள்இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். 2004இல் இவருக்கு, 'அர்ஜுனா விருது' வழங்கப்பட்டது. இவரது சுயசரிதை நூல் 'ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்' (Ace against Odds).நவம்பர் 15, 1942 - டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் பிறந்த நாள்தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தினார். புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு குறித்து குரல் கொடுத்தார்.நவம்பர் 17, 1909 - சி.இலக்குவனார் பிறந்த நாள்இலக்கிய ஆய்வாளர். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்க் காப்புக் கழகத்தைத் தொடங்கினார். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழகம் முழுக்க சொற்பொழிவாற்றித் தமிழை வளர்த்தார்.