உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

டிசம்பர் 2, 2001 - உலக கணினி எழுத்தறிவு நாள்மனிதனின் அன்றாட வாழ்வில் அனைத்து வேலைகளிலும் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.டிசம்பர் 2, 1984 - தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள் போபாலில், நச்சு வாயுக் கசிவால் பலர் இறந்தனர். இது உலக அளவில் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாகப் பதிவு ஆனது. இதன் நினைவாகவும் மாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.டிசம்பர் 3, 1884 - இராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல் சாசனம் வகுக்கும் பணிக்குழுவுக்குத் தலைமை ஏற்றார். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக 1950 முதல் 1962 வரை இருந்தார். இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்தது.டிசம்பர் 4, 1910 - இரா.வெங்கட்ராமன் பிறந்த நாள்சுதந்திர இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர். 1987 முதல் 1992 வரை அந்தப் பதவியில் இருந்தார். தமிழ்நாட்டில் காமராஜர் அமைச்சரவையில் தொழிலாளர் நலம், மின் துறைகளை நிர்வகித்தார். கிண்டி, அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டைகள் இவர் உருவாக்கியவையே!டிசம்பர் 5, 1901 - வால்ட் டிஸ்னி பிறந்த நாள்கேளிக்கை உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். மிக்கி மௌஸ், டொனால்ட் டக் போன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். பொழுதுபோக்குப் பூங்கா உருவாக்கினார். இவரது 26 படங்கள் ஆஸ்கார் பரிசை வென்று இருக்கின்றன.டிசம்பர் 7, 1949 - இந்திய கொடி நாள்இந்திய முப்படை வீரர்களின் பணிகளையும் தியாகங்களையும் போற்ற, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி, வீரர்களின் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !