உள்ளூர் செய்திகள்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

முன்னா: பாட்டி ஊர்ல நடக்குற திருவிழாவுக்குப் போறேன் நீயும் வாடா.சங்கர்: மே மாச திருவிழான்னா கூழ், கஞ்சி கிடைக்கும் அதுக்காகவே போகலாமே!மு: கூழ், கஞ்சி எதுக்குடா. நல்ல சோறு கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்.ச: அடப் போடா... வெயில் காலத்துக்குக் கூழ்தான் நல்லது. அதனாலதான் கோவில்கள்ல கோடைக் காலத்துல கஞ்சி, கூழ் ஊத்துறாங்க.மு: அதுல வேப்பிலை இருக்கும். எப்படிடா குடிக்க முடியும். ச: வேப்பிலை மட்டுமில்ல அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம் அப்படின்னு உடலுக்குக் குளிர்ச்சி தர்ற எல்லாமே கலந்திருக்கும்.மு: அப்படியா! ஜூஸ் மாதிரி இதயும் பாக்கெட்ல அடைச்சுக் கொடுத்தா, எப்ப வேணும்னாலும் வாங்கி, 2 மினிட்ஸ்ல குடிக்கலாம்.ச: அடப்பாவி... பாக்கெட்ல விக்கிற உணவுப் பண்டங்கள் உடலுக்குக் கெடுதி. வீட்டுல தயார் பண்ற உணவுகள்தான் நல்லது.மு: 'இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது' அப்படின்னு சொல்ற பொருட்கள்கூட பிளாஸ்டிக் பேக்கிங்லதான் வருது. நான் இதச் சொன்னா அதிகமா பேசுறேன்னு சொல்லுவே...ச: இல்லை இல்லை. நீ சொல்றது சரிதான். பிளாஸ்டிக் தாள் இல்லாம, பனை ஓலைக்குள்ள மாவு வச்சு செய்யுற கொழுக்கட்டைகள் எவ்வளவு ருசியா இருக்கும் தெரியுமா!மு: கொஞ்சநாள் போகட்டும் அதுவும் ஆன்லைன்ல கிடைக்கும். ஆர்டர் பண்ணிடலாம்.ச: ஆ... ஊ...ன்னா ஆன்லைன் ஷாப்பிங். கேக்குற எல்லாமே வீடு தேடி வர்றதாலதான் இப்படிப் பேசுற. பண்டமாற்று முறை இருந்த காலத்துல நீ வாழ்ந்து இருக்கணும்... மு: 'திருவிழாவுக்கு வாடா'ன்னு கூப்பிட்டது தப்பா? நீ என்னைக்கு மௌன விரதம் இருக்கியோ அன்னைக்குதான்டா எனக்குத் திருவிழா. ச: ஹ... ஹா... முதல்ல இந்த திருவிழாவுக்குப் போய்க் கூழ் குடிப்போம். அப்புறம் உனக்கு திருவிழா வைக்கலாம்.மு: கூழ் குடிக்கலன்னா என்னைய விடமாட்டே போல இருக்கே. ஓகே... கூழ் குடிப்போம்; கூலா இருப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !