மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்
சங்கர்: என்னாச்சுடா முன்னா? கையையும் காலையும் ஒருபக்கமா வெட்டி வெட்டி இழுக்கிற?!முன்னா: ரோபோ டான்ஸ் ப்ராக்டிஸ் பண்றேன். டிஸ்டர்ப் பண்ணாம போடா.ச: ரோபோ டான்ஸா? இதுவா? ஹி... ஹி...மு: மெட்டல் பாடி இருந்தாதான் ரோபோ டான்ஸ் ஆடணுமா என்ன? பார்த்துக்கிட்டே இரு இன்னும் ரெண்டு நாள்ல நான் ஆடிக் காட்டுறேன். இல்லன்னா என் பேர மாத்திக்குறேன். ச: ஒரு ஐடியா சொல்றேன். டெர்மினேட்டர், ஐ ரோபோ, எந்திரன் மாதிரி ரோபோக்கள் நடிச்ச படங்களைப் பார்த்து, நீ ஏன் ஸ்டெப்ஸ் கத்துக்கக் கூடாது?மு: ஐடியா கொடுக்குறேன்னு சொல்லி என்னய வச்சு வித்தை காட்ட ப்ளான் பண்றயா?ச: நீ வித்தை காட்ட வேணாம். வீட்டைச் சுத்தம் செஞ்சா போதும்.மு: என்னடா சொல்ற? உன் பேச்சு இன்னைக்கு சுத்தமா சரியில்ல.ச: டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அக்வாபாட் 5.0 என்கிற ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் வீடு, அலுவலகங்களை ஆளில்லாமலே சுத்தம் செய்கிறது.மு: அப்படியா! ரோபோன்னா கெத்தா இருக்கும் நினைச்சேன். கடைசில சுத்தம் பண்ண வச்சிட்டாங்களே?!ச: அப்படி நினைக்காத. ஹியூமனாய்டு ரோபோ ஒண்ணு செவ்வாய் கிரகம் போக ரெடியா இருக்குது. நாசா அனுப்புற அந்த ரோபோ பெயர் 'வால்கரி'.மு: நானும் ஹியூமனாய்டு ரோபோ மாதிரிதான் ப்ராக்டிஸ் பண்றேன். எனக்கும் பவர் வரப்போகுது. மின்னல் மாதிரி ஓடுவேன் பாரு!ச: ஏற்கெனவே அமெரிக்க ரோபோ ஒண்ணு 'மின்னல் வீரன்' உசேன் போல்ட்டைவிட வேகமா ஓடி சாதனை படைச்சிருக்கு!மு: இந்த அமெரிக்கா விஞ்ஞானிகளுக்கு வேற வேலையே இல்லையா? நான் நினைக்குறத எல்லாமே காப்பி அடிச்சு பண்ணிடுறாங்க...ச: உன்னோட ஐடியாவ காப்பி அடிச்சிட்டாங்களா? ரொம்ப ஓவராப் போற. முதல்ல உனக்கு காபி போடத் தெரியுமா? மு: கருப்பட்டி காபி, சுக்கு காபி, ஐரிஷ் காபி, ஃபில்டர் காபி, டர்கிஷ் காபி, எஸ்ப்ரஸ்ஸோ, கேப்புசீனோ இதுல உனக்கு என்ன காபி வேணும்?!ச: என்னடா! இவ்வளவு காபி வகைகள் இருக்கா? 'காபி வித் முன்னா' அப்படின்னு நிகழ்ச்சி நடத்தலாம்போல. மு: டேய் ஷார்ப்பு. கிரீன் டீ மாதிரி கிரீன் காபி போட்டுத் தரவா..?