உள்ளூர் செய்திகள்

சில்வர் மங்கை சிந்து!

இந்தியாவே ஆவலோடு எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த பி.வி. சிந்து இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேஸில் ரியோ ஒலிம்பிக், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் ஃபைனல் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தரவரிசையில் 10ஆவது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். 1 மணி நேரம், 19 நிமிடப் போராட்டத்தின் முடிவில், 21 - 19, 12 - 21, 15 - 21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார். இருப்பினும், ஒலிம்பிக் பாட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார் சிந்து!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !