உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு திறன் வளர்க்கும் போட்டிகள்

சுவாமி விவேகானந்தரின் பிரசித்தி பெற்ற சிகாகோ உரை நிகழ்த்தப்பட்டு, 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.மாநில அளவிலான போட்டி என்பதால், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்று அடுத்த கட்டத்திற்குச் செல்பவர்களுக்குச் சான்றிதழ்கள், ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. மொத்தப் பரிசு ரூ.10 லட்சம்.போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், 8903053402/9840987307/9443105300/ 8176733362 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !