ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங் (Skipping) பயிற்சியைத் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். இது எட்டு நிமிடங்களில் 1 கி.மீ. தூரம் ஓடியதற்குச் சமம். தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தால் ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். ஸ்கிப்பிங் செய்வது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலம் சேர்க்கிறது.