உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் பேச்சுத் திறனை பாதிக்கும் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள், பேச ஆரம்பிப்பதற்கு காலதாமதமாகும் என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அது குழந்தைகள் பேசி பழகுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில், 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894 குழந்தைகளிடம் 3 ஆண்டுகள், இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தினமும் அரைமணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள், வழக்கத்தை விட 49 சதவீதம் காலதாமதமாக பேசுவது தெரியவந்துள்ளது. எனவே, இரண்டு வயது வரை, குழந்தைகளுடன் நேரடியாக பேசிப்பழகுவதை பெற்றோர் அதிகப்படுத்த வேண்டும் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !