புகை நமக்கு பகை
வாகனப் புகையினால் ஏற்படும் மாசுகளைக் குறைப்பதற்காக இனி பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 2040ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரான்ஸ் சூழலியல் அமைச்சர் நிக்கோலஸ் வெளியிட்டுள்ளார். அதிக புகை வெளியிடும் வாகன உரிமையாளர்கள், வாகனத்தைப் புதியதாக மாற்றிக்கொள்ள அரசு ஊக்கத்தொகை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் அரசு அணு மின்சார பயன்பாட்டையும் பாதியாகக் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், 2025ம் ஆண்டிற்குள் தேவையற்ற அணு உலைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.