உள்ளூர் செய்திகள்

சோலார் விமானம் பயணம் நிறைவு

சூரிய சக்தியில் இயங்கும் 'இம்பல்ஸ்' சோலார் விமானத்தின் உலகப் பயணம் நிறைவடைந்தது. அபுதாபியில் தொடங்கி உலகம் முழுவதும் ஓராண்டு காலமாகப் பயணம் செய்து மீண்டும் அபுதாபியை வந்தடைந்தது. சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த கேப்டன் பெர்ட்ரான்ட் பிக்கார்ட், ஆந்தரே போர்ச்பெர்காரே ஆகியோர் இதில் பயணம் செய்தனர். அபுதாபியிலிருந்து மஸ்கட், ஆமதாபாத், வாரணாசி என உலகம் முழுவதும் சுமார் 43 ஆயிரம் கி.மீ. தூரத்தை இந்த சோலார் விமானம் கடந்துள்ளது. 'இது மனிதகுலத்தின் மிகப்பெரிய வரலாற்று சாதனை' என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !