உள்ளூர் செய்திகள்

சோலார் விமானம்

சூரிய சக்தியில் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் -II' விமானம், கடந்த 2015 மார்ச் 9ஆம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பி உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. 'பெட்ராண்ட் பிக்கார்டு' எனும் சுவிஸ் விமானி அந்த விமானத்தைச் செலுத்துகிறார். தற்போது, ஸ்பெயினில் இருந்து 11ஆம் தேதி புறப்பட்ட சோலார் விமானம், இரண்டு நாட்கள் பயணத்துக்குப் பின் நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோ வந்தடைந்தது. சராசரியாக மணிக்கு 76.7 கி.மீ., வேகத்தில் பறக்கும் சோலார் விமானம், 3,745 கி.மீ. தொலைவு பயணித்து உலகம் சுற்றும் பயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !