நீட் மொழிபெயர்ப்பு பிரச்னைக்குத் தீர்வு
நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிபெயர்ப்பு பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நீட் தேர்வில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டன.இந்நிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட வல்லு னர்கள் மூலமே, நீட்தேர்வு வினாத்தாள், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. எனினும், அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வு வினாத்தாளை மொழி மாற்றம் செய்யும்போது, அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து பிரமாணப் பத்திரம் பெறப்படும். அது மட்டுமன்றி, அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் நெடுந்தூரம் பயணித்து தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.