உள்ளூர் செய்திகள்

விண்வெளி நமதே: கனவு பலித்தது

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் 1985 பிறந்தார் இந்தச் சிறுவன். அங்குள்ள 'சிட்டி மான்டிஸோரி' (City Montessori School) சர்வதேசப் பள்ளியில் படித்தார்.பள்ளியில் படிக்கும் போது, விமானப் படை சாகச் நிகழ்ச்சிகளைக் கண்டார். பதினான்கு வயதிருக்கும் போது, பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே, கார்க்கில் பகுதியில் போர் நடைபெற்றது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு, இந்திய விமானப் படையின் பங்களிப்பு காரணமாக இருந்தது.இதைத் தெரிந்துகொண்ட சிறுவனுக்கு, தானும் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.விமானப் படையில் சேர்ந்து, சாகசம் புரிய விரும்பினார். பள்ளியில் விமான மாதிரிகள் செய்தார்.பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர்ந்தார். அதன் பிறகு விமானப் பயிற்சி மையத்தில் சேர்ந்து, விமானம் இயக்குதவற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.2019இல் இந்தியாவின் இஸ்ரோ மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு ரஷ்யாவின் யூரி ககாரின் பயிற்சி மையத்திலும் விண்வெளிப் பயணம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டார்.ஜூன் 25, 2025 அன்று, அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம், டிராகன் ஃபிளை விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டார். அங்கு அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களுடன் 18 நாட்கள் தங்கியிருந்தார். பச்சைப் பயறு, வெந்தயத்தை உடன் எடுத்துச் சென்று, புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் இந்த விதைகள் எப்படி முளைக்கின்றன என்பதை ஆய்வு செய்தார்.ஜூலை 15, 2025 அன்று பூமிக்குத் திரும்பிய இந்த, இந்திய விண்வெளி வீரர் யார்?விடைகள்: சுபான்ஷு சுக்லா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !