விளையாட்டுக் காலணிகள் (Sports shoe)
1976ஆம் ஆண்டு ப்ராங்க் ரூடி (Frank Rudy) என்னும் விஞ்ஞானி, அந்த ஆண்டுதான் ஓட்டப்பந்தயக் காலணிகளைச் சீரமைத்தார். ஒரு விஞ்ஞானி, காலணிகளில் கவனம் செலுத்துவானேன்? விண்வெளிப் பயணங்களில் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள், பல்வேறு விஷயங்களில் தடுமாறினர். மெல்லிய அடிப்பாகம் கொண்ட ஷூக்கள், வீரர்களின் பயன்பாட்டுக்கு உதவவில்லை. நைக் (Nike) நிறுவனத்துடன் இணைத்து ரூடி தயாரித்த காலணிகள், அடிப்பாகத்தில் குஷன் போன்று இருந்தது. நடுவில் காற்றடைத்து, பாதங்களுக்கு அடியில், 'மெத்'தென்று இருந்தன. வெகுகாலம் உழைத்தன. விண்வெளி வீரர்களுக்கு மிகுந்த சௌகரியமாக இருந்தன. பிரபஞ்சவெளியில் மட்டுமன்றி, பூமியிலும் இக்காலணிகளுக்கான பயன்கள் இருப்பதை உணர்ந்தன பன்னாட்டு நிறுவனங்கள். அவற்றை விற்பனைக்குத் தயார் செய்தன. விரைவில், இந்த ஷூக்கள் ஓட்டப்பந்தய வீரர்களின் விருப்பத் தேர்வாக மாறின. - பவித்ரா ஸ்ரீனிவாசன்