மைதானம்: வீராங்கனை பெயரில் ஸ்டேடியம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-- பேட்ஸ் வுமனாகத் திகழ்கிறார் இவர்.சமீபத்தில் நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டித் தொடரில் 12 சிக்ஸர்கள் அடித்து, உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை டீண்ட்ரா டாட்டினுடன் (மேற்கிந்திய தீவுகள்) பகிர்ந்து கொள்கிறார்.சர்வதேச டி20 போட்டிகளில், குறைந்த பந்துகளில் (18 பந்துகள்) வேகமாக அரைசதம் எடுத்த இந்திய வீராங்கனை என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஆஸ்திரேலிய, நியூசிலாந்து வீராங்கனைகளின் சாதனைகளை இவர் சமன் செய்துள்ளார்.தனது அதிரடியான ஆட்டம் மூலம் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மேற்கு வங்க அரசின் உயரிய 'வங்க பூஷன்' விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநில காவல்துறையில், துணை கண்காணிப்பாளர் (DSP) பதவியும் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டார்ஜிலிங்கில் புதியதாகக் கட்டவிருக்கும் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு, இவரின் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.ஆண்கள் கிரிக்கெட் உலகில் செல்லமாக 'தாதா' என்று அழைக்கப்படும் செளரவ் கங்குலிக்குக் கூடக் கிடைக்காத இந்த அங்கீகாரம் பெற்ற, வீராங்கனை யார்?விடைகள்: ரிச்சா கோஷ்