காலை எழுந்ததும் படிப்பு
பாடம் படி என்ற சொல், நம் மாணவர்களுக்கு வேப்பங்காய் போல கசந்தாலும், தேர்வு என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுப்பதில்லை. பலர் விடியவிடிய கண்விழித்தும், சிலர் அதிகாலை எழுந்தும் பாடங்கள் படிப்பதை நாம் அறிவோம். அதனாலேயே தேர்வு நேரத்தில் படிக்க ஏற்றதாக, நீங்கள் விரும்பும் நேரம் எது? என கேட்டிருந்தோம். சிவகாசி, இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் தங்களின் கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.அனிதா ஈஸ்வரி 12ஆம் வகுப்புகாலை 4 to -6 மணி வரை படிப்பேன். அமைதியான சூழலில் படித்தால் மட்டுமே மனத்தில் பதியும். அந்த நேரத்தில் புரியாத பாடப்பகுதிகளைப் படித்தாலும் புரிந்துகொள்ளலாம். இதை தினசரி வழக்கமாக்கிக் கொண்டால் ரொம்பவும் நல்லது. இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.பாண்டிச்செல்வி 10ஆம் வகுப்புஅதிகாலை நேரம் எழுந்ததும் கொஞ்சம் சோம்பலாக இருக்கும். பல் துலக்கியதும் புத்துணர்ச்சி வந்துவிடும். அந்த நேரத்தில் உட்கார்ந்து படிக்கிறதுதான் மிகவும் உகந்தது. எளிதில் மனப்பாடம் ஆகும். படிக்கிறதுடன் எழுதியும் பார்த்துக்கொண்டால் மறக்கவே மறக்காது. கபிலன் 11ஆம் வகுப்புஅதிகாலையில் எழுந்து படித்தால் சீக்கிரம் மனத்தில் பதியும். மற்ற நேரத்தில் 2 மணிநேரம் படிக்க வேண்டியதை, காலையில் 30 நிமிடத்தில் படித்து விடலாம். அது மாதிரியே, துாங்கப் போகும்போது மனத்தில் எந்தவிதக் குழப்பமும், தேர்வு பற்றிய பயமும் இருக்கக்கூடாது. இரவு, நல்ல மனநிலையில் துாங்கினால், அதிகாலையில் எழுந்துகொள்ள ஈஸியாக இருக்கும். யோகேஸ்வரி 11ஆம் வகுப்புஇரவு சாப்பாட்டை முடிச்சதும், கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வந்துட்டு, இரவு 11 மணி வரை படிப்பேன். அதுபோல காலையில் 4 மணிக்கு எழுந்து, கணக்கு சூத்திரம், கஷ்டமான குறியீடுகள் போன்றவற்றைப் படித்தால் எளிதில் புரியும். மனத்தை ஒரு நிலைப்படுத்தி படிக்க அமைதியான நேரம் முக்கியம். வல்லரசு 12ஆம் வகுப்புஎன் சாய்ஸ், அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை. அந்த நேரம் படிக்க ரொம்பவும் உகந்த நேரமாக இருக்கிறது. சிலர் இரவு முழுக்க கண் விழிச்சு படிக்கிறாங்க. அப்படி படிக்கணுங்கிற அவசியமே இல்லை. இரவு 9 அல்லது 10 மணிக்குள் தூங்கிட்டு காலைல எழுந்து படிப்பது நல்லது.விஷ்ணு 10ஆம் வகுப்புதினமும் மாலை வீட்டுக்கு வந்ததும், பள்ளியில் நடத்திய பாடங்களை கொஞ்சநேரம் ரிவிஷன் பண்ணுவேன். காலையில் எழுந்து புத்துணர்ச்சிக்காக எக்சர்சைஸ் செஞ்சிட்டு, படிப்பேன். அப்போது, மனத்தில் வேறு எந்தச் சிந்தனையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்துடன் படித்தால்தான் அனைத்தும் மனத்தில் பதியும். அதிகாலையில் படிப்பதே சிறந்தது.