உள்ளூர் செய்திகள்

மாணவியின் கண்ணீர்

வகுப்பில் முன் வரிசையில் ஒரு மாணவி, எதற்கோ கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாள். அவள் ஆசிரியர் கண்ணில் இது பட்டுவிட்டது. அவள் மீது இடை இடையே கண்களை ஓட்டியபடி வகுப்பை நோக்கி,'காலாயுதக் கொடியோன்கையாயுத விழியாள் மாலாயுதம் என்ற மாமணியைத் தான் உதிர்த்தாள்… ஏன்?'என்று கேட்டார்.இதென்ன விடுகதை என்கிறீர்களா? அந்த ஆசிரியரே மாணவர்களுக்கு விளக்கினார்.'காலையே ஆயுதமாகக் கொண்டது - சேவல்; சேவலைக் கொடியாகக் கொண்டவன் முருகன். முருகனின் ஆயுதம் வேல். திருமால் ஆயுதம் சங்கு. சங்கிலிருந்து தோன்றுவது முத்து.'வேல் விழியாள் ஏன் முத்து முத்தாகக் கண்ணீர் சிந்துகிறாள்? என்பதைத்தான் இப்படிப் பாடல் வடிவில் கேட்டார் அந்த ஆசிரியர். அழுதவள் உட்பட அனைவருக்கும் சிரிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !