பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்றெல்லாம் புத்தக வகைகள் இருப்பதைப் பாடத்தில் படித்திருப்பீர்கள். அவற்றில் பத்துப்பாட்டு என்று குறிப்பிடப்படுபவை எந்தெந்த நூல்கள்? அவற்றின் பெயர்கள்தான் பக்கத்தில் உள்ள வட்டங்களின் கட்டத்தில் உள்ளன. படத்தில் குறிப்பிடப்பட்ட பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு. ஒரே தொகுப்பாக, தற்போது குறிப்பிடப்பட்டாலும், இவை வெவ்வேறு ஆசிரியர்களால் வேறு வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இந்தப் பத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக ஒரு சிறிய பாட்டும் இருக்கிறது.இதுதான் அந்தப் பாட்டு:முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வள மதுரைக் காஞ்சி -மருவினியகோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து.'பத்துப்பாட்டு சொல்லிட்டீங்க. எட்டுத்தொகை என்ன விவரம்?' என்று கேட்கும் விவரமானவர்களுக்காக அதுவும் கீழே…பத்துப்பாட்டு மாதிரியே எட்டுத் தொகை நூல்களை நினைவில் வைக்கவும் ஒரு பாட்டு உள்ளது. அது, நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றுஇத்திறத்த எட்டுத் தொகை.அதாவது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவையே எட்டுத்தொகை நூல்கள்.