உள்ளூர் செய்திகள்

தங்க மங்கையர்!

சீனாவின் புடியான் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டுக் கூட்டமைப்பின் (ISSF- International Shooting Sport Federation) 2019ஆம் ஆண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் மானு பேக்கர், இளவேனில் வாலறிவன் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் 244.7 புள்ளிகளில் மானுவும் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகளுடன் தமிழக வீராங்கனையான இளவேனிலும் தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில், பன்வார் திவ்யன் சிங் வென்றுள்ள தங்கத்தோடு சேர்த்து இந்தியா இதுவரை 3 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !