உலகின் சிறந்த கால்பந்து வீரர்!
ஆண்டுதோறும் சிறந்த வீரர்களைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி வருகிறது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா). இந்த ஆண்டுக்கான இறுதிப் பட்டியலில், லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் மெஸ்சி, உலகின் சிறந்த கால்பந்து வீரராகத் தேர்வு பெற்றார். கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக கோல்கள் (12) அடித்து இருந்தார். அத்துடன் லா லிகா போட்டியிலும் 36 கோல்கள் அடித்து கோல்டன் ஷூவைப் பெற்று இருந்தார். பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடும் மெஸ்சி 6-வது முறையாக (2009, 2010, 2011, 2012, 2015, 2019) இந்த விருதைப் பெற்றுள்ளார்.உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக மேகன் ரபினோ (அமெரிக்கா) தேர்வு செய்யப்பட்டார்.