உள்ளூர் செய்திகள்

மருத்துவத்தில் நுழைந்து வரலாறு படைத்த முதல் பெண்

மருத்துவப் படிப்பை இன்று, இருபாலரும் படிக்கலாம். ஆனால், 1907ம் ஆண்டுக்கு முன், இந்த நிலை இல்லை. ஆண்கள் மட்டுமே படிக்கக் கூடிய துறையாக இருந்தது. இந்த நிலையை மாற்றியவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவர்தான், தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர். அந்தக் காலத்தில், பள்ளிக் கூடங்கள் குறைவு. பெண்கள் படிப்பதும் குறைவு. ஆனால், முத்துலட்சுமிக்கு படிக்க வேண்டும் என்பது கனவாகவும், குறிக்கோளாகவும் இருந்தது. தனக்கு முன் உதாரணமாக யாரும் இல்லையே என்று நினைக்கவில்லை அவர். தானே எல்லாருக்கும் உதாரணமாக இருக்க விரும்பினார். அவர் படித்த காலத்தில், புதுக்கோட்டையில் இருந்த கல்லூரியில், பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற விதி இருந்தது. முத்துலட்சுமிக்கு கல்வியின் மேல் இருந்த ஈடுபாடு காரணமாக, அதை தகர்த்தார். தந்தையை வற்புறுத்தி, புதுக்கோட்டை மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற்று, கல்லூரியில் சேர்ந்தார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்வில் முதலிடம் பிடித்தார். புதுக்கோட்டையில் படிப்பு முடிந்த பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தங்களுக்கு நடுவில் ஒரு இந்தியப் பெண் பயில்வதை, பெரும்பாலான ஆண்கள் விரும்பவில்லை. அது பற்றியெல்லாம் கவலைப்படாத முத்துலட்சுமி, தன் குறிக்கோளில் கவனமாக இருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில், ஒரே இந்தியப் பெண்ணாக மருத்துவம் பயின்றார். சில ஆங்கிலேய பெண்கள், மருத்துவ வகுப்பில் இருந்தனர். இவர், திரை போட்டு மூடிய வாகனத்தில் சென்று படித்தார். மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர், கர்னல் ஜிப்போர்டு என்பவர், தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டாராம். அறுவைச் சிகிச்சை பாடத்தில், முழு மதிப்பெண்களை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான், பெண்களும் உட்காரலாம் என்று மனம் மாறினாராம். இந்தியாவிலேயே மருத்துவம் படித்த, முதல் பெண் என்ற பெருமை பெற்றார். அரசு மகப்பேறு மருத்துவமனையில், முதல் பெண் மருத்துவராகவும் ஆனார்.புற்றுநோய் மருத்துவமனை: டாக்டர் முத்துலட்சுமியின் சகோதரி, புற்று நோயால் இறந்து விட்டார். அவரின் மரணம் தந்த பாதிப்பில், 1952ல் அடையாறில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். அது மருத்துவமனையாக, 1954 முதல் செயல்பட ஆரம்பித்தது. இன்று, புகழ் பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.தேவதாசி முறை ஒழிப்பு: கோவில்களில் பெண்களை நேர்ந்து விடும், தேவதாசி முறை இருந்தது. இப்படி நேர்ந்து விடப்படும் பெண்கள், திருமணம் செய்து கொள்ளக் கூடாது. கோவிலுக்கு சேவை செய்து, வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற பரிதாப நிலை இருந்தது. இதற்கு முத்துலட்சுமி எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தக் கொடுமை கூடாது என்றார். இதற்கு மாறாக, எதிர்ப்புக் குரல் கொடுத்த, தீரர் சத்தியமூர்த்தி போன்ற உறுப்பினர்களுக்கு, 'உங்கள் வீட்டில் அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்ணையாவது, இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?' என்று திருப்பிக் கேட்டார். பின்னர், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் இயற்றி, தமிழகத்தில் ஒழிக்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி பெயரால், தமிழக அரசு மகப்பேறு உதவித்தொகை வழங்கி வருகிறது.சேவைகள்* பெண்கள் நலனுக்காக, அடையாறில் 'அவ்வை இல்லம்' தொடங்கினார். * சட்டமேலவையில், முதன் பெண் உறுப்பினராக நியமனம் பெற்றார். * உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு, காப்பகங்கள் ஏற்படுத்தப் பாடுபட்டார்.* ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை வேண்டும் என்று, குரல் எழுப்பினார். * பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'ஸ்திரி தர்மா' என்ற இதழை நடத்தினார். * சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்வதை எதிர்த்தார்.* பெண்களுக்கு திருமண வயது 16 ஆக, இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.1886: பிறப்பு 1912: டாக்டர் பட்டம்; அரசு முதல் பெண் மருத்துவர் 1952: அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் துவக்கம்1956: பத்மபூஷன் விருது 1968: மறைவுகாந்தியின் படங்களைப் பார்க்கும்போது, எல்லா வம்சாவளிக்கும் பொதுவான ஒரு தாத்தாவாகத் தெரிவார். சட்டையைப் போட்டுக் கொண்டு, பஞ்சகச்சம் கட்டியிருந்தால், அவரை ஒரு வட இந்தியர் என்று சொல்லிவிடலாம். பஞ்சகச்சம் கட்டி, மேலே சட்டை போடாமல் இருந்ததால், அவர், நம்மூர் தாத்தா மாதிரி தெரிந்தார். காந்தியின் எளிமை, ஆளுமை, உருவம் எல்லாம் சேர்ந்து என்னை நிறைய வரையத் தூண்டின. நான், அவரை நிறைய படங்கள் வரைந்துள்ளேன்.- ஓவியர் ஆதிமூலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !