உள்ளூர் செய்திகள்

பறவைகளின் நண்பன்

சலீம் மொய்சுதீன் அப்துல் அலி12.11.1896 - 20.6.1987மும்பைஅப்போது அவருக்குப் பத்து வயது. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டுத் துப்பாக்கியால் மரத்தில் இருந்த குருவிக் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டார். எல்லாக் குருவிகளும் பறந்து செல்ல ஒரே ஒரு குருவி மட்டும் கீழே விழுந்தது. அந்தக் குருவியை அவர் உற்று நோக்கியபோது தொண்டையில் மஞ்சள் நிறத் திட்டு இருந்தது. அது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் தனது மாமாவிடம் விளக்கம் கேட்டார். விளக்கம் சொல்லாத அவர் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம் சென்று விவரம் அறிந்து கொள்ளச் சொன்னார். அங்கு சென்று, அடிபட்ட குருவி பற்றித் தெரிந்துகொண்டார். அவர்தான் பறவையியல் அறிவியலாளராகப் புகழ் பெற்ற சலீம் அலி.மிகச் சிறிய வயதிலேயே தாய், தந்தையை இழந்த சலீம், தன் மாமா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே, பறவைகள் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்தது. கல்லூரிப் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் பறவைகள் எங்கு செல்கின்றன, எவ்வாறு இரை தேடுகின்றன, எப்படி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன? என்பன போன்ற தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார். வேலைக்காக பர்மா சென்று, அங்கே காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த பறவைகளைப் பற்றியும் ஆராய்ந்தார்.வித விதமான பறவை மாதிரிகள், இறகுகள் போன்றவற்றைச் சேகரித்துக் குறிப்புகளை உருவாக்கினார். பறவையியல் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள 1927ல் பெர்லின் சென்று, ஸ்ட்ரெஸ்மான் என்பவரிடம் பறவைகளின் பாதுகாப்பு குறித்து தேவையான பயிற்சிகள் பெற்றார்.“நம் நாட்டு பறவைகள் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய இருக்கும்போது ஏன் வெளிநாட்டுப் பறவைகளை ஆராய வேண்டும்?” என்று கருதினார். சுதந்திரத்துக்குப் பின் நேருவுடன் நட்பில் இருந்ததால் தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைய உறுதுணையாக இருந்தார்.மும்பையில் தோட்டத்துடன் கூடிய அவரது வீட்டில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்தன. வாழ்நாள் இறுதிவரை பறவைகளுடன் வாழ்ந்து, பறவைகளின் நண்பனாக இருந்திருக்கிறார் சலீம் அலி!விருதுகள்வனவிலங்கு பாதுகாப்பு விருதுதேசிய பறவை பேராசிரியர் விருது1958 - பத்ம பூஷண் 1976 - பத்ம விபூஷண் இவரது முக்கியமான நூல்கள்1932 - கேரளப் பறவைகள் (The Birds of Kerala)1942 - இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds)1955 - சிக்கிம் பறவைகள் (Birds of Sikim)1974 - இந்திய, பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு (Handbook of Birds of India and Pakistan) 1985 - ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of a saprrow), சுயசரிதை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !