மனமே நமக்கான அறிவு
'ஒன்றறி வதுவே உற்றறி வதுவேஇரண்டறி வதுவே அதனொடு நாவேமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கேநான்கறி வதுவே அவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே அவற்றொடு செவியேஆறறி வதுவே அவற்றொடு மனமேநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே'தொல்காப்பியர் எழுதிய பாடல் இது. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை, உயிர்களுக்கான வேறுபாட்டை பட்டியலிடுகிறது, இந்தப் பாடல். ஓரறிவு -உடம்பினாலே அறிவது. செடி, கொடி, புல், மரம் (தொடு உணர்வு மட்டும் இருப்பது)ஈரறிவு- உடம்பு, வாயினாலும் அறிவது. சங்கு, கிளிஞ்சல், நத்தை, ஏரல் (தொடு உணர்வு, சுவையுணர்வு)மூவறிவு உடம்பு, வாய், மூக்கினால் அறிவது. அட்டை, எறும்பு, கறையான் (தொடுதல், சுவைத்தல், முகர்தல்)நாலறிவுஉடம்பு, வாய், மூக்கு, கண்ணால் அறிவது. நண்டு, தும்பி முதலியன (தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்) ஐந்தறிவுஉடம்பு, வாய், மூக்கு, கண், செவியால் உணர்வது. நான்கு கால் விலங்குகள், பறவை இனங்கள் (மற்ற நான்கினோடு கேட்கும் திறன் இருப்பது)ஆறறிவு உடம்பு, வாய், மூக்கு, கண், செவி, மனம் ஆகியவையே ஆறறிவு. மனிதர், தேவர். (ஐந்தறிவோடு ஆறாவதாய் மனத்தால் உணர்வது. ஆய்ந்தறிவது)ஆக மனம் மட்டும்தான் மற்ற உயிர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டுகிறது. அதை வைத்துக்கொண்டு ஆன மட்டும் பிறருக்கும், பிற உயிர்களுக்கும் நல்லதே செய்வோம்.