காணாமல் போன புலி
மகாராஷ்டிரா மாநிலத்தின் 'உம்ரெட் கர்ஹன்ட்லா' சரணாலயத்தில் இருந்த 'ஜெய்' என்ற புலி காணாமல் போய்விட்டது. அங்குள்ள வனப்பகுதியில் 'பவோனி சர்க்கம்' என்ற பகுதி அருகே இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புலி கடந்த 2013ஆம் ஆண்டு 'நாக்சிரா' புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 130 கி.மீ.வரை நடந்தே 'உம்ரெட் கர்ஹன்ட்லா' வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. 'ஜெய்' புலி காணாமல் போனதை அடுத்து பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனவிலங்கு புகைப்படவியலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் சேர்ந்து புலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.