அருங்காட்சியகம் ஆகிறது சிறுவர்கள் சிக்கிய குகை
கடந்தவாரம் உலகின் கவனத்தை ஈர்த்த தாய்லாந்தின் தாம் லுவாங் குகை (Tham Luang Cave) அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது.மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகக் காட்டுக்குள் சென்று 17 நாட்கள், தாம் லுவாங் குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 பேரையும் கடுமையான போராட்டங்களுக்குப் பின், பத்திரமாக மீட்புப்படையினர் காப்பாற்றினர்.சர்வதேச நாடுகளின் உதவியுடன், 13 பேரையும் தாய்லாந்து அரசு பத்திரமாக மீட்டது. இச்சம்பவத்தில், மீட்புக்குழுவினரின் தியாகத்தையும் தீரத்தையும் போற்றும் வகையில், அந்தக் குகையை அருங்காட்சியகமாக மாற்ற தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. மீட்புப் பணியை ஒத்திகையாகக் காட்டவும், அந்நாட்டு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.