உள்ளூர் செய்திகள்

சூரிய குடும்பத்தின் புதிய கோள்!

ஜன. 21 - நெப்டியூன் (Neptune) கோளுக்கு அப்பால், பூமியைவிடப் பத்து மடங்கு அதிக எடை கொண்ட ஒரு கோள் இருப்பதற்கான தடயம் தெரிகிறது. இந்தக் கோளுக்கு 'பிளானட் 9' (Planet 9) என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கலிஃபோர்னியா தொழில் நுட்ப மையத்தைச் (California Institute of Technology) சேர்ந்த விஞ்ஞானி மைக் பிரவுன் (Mike Brown) இந்தத் தடயத்தைக் கண்டிருக்கிறார். இவர்தான் கடந்த 2006 ஆம் ஆண்டில் புளூட்டோவைக் கோள் என்று கருதக் கூடாது என நிறுவியவர். 'பிளானட் 9' இருப்பது நிரூபிக்கப்பட்டால் 'சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள்' என்ற பெருமை இதற்குக் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !