உள்ளூர் செய்திகள்

செய்தித்தாள் விற்றவர் இன்று குத்துச் சண்டை வீரர்

புனேவைச் சேர்ந்த அக்ஷய் மரே (Akshay Mare) எனும் 22 வயது இளைஞர், தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். வறுமையில் வாடும் இவர், வீடுகளுக்கு செய்தித்தாள் வினியோகம் செய்தபடியே, இப்பயிற்சி பெற்று பதகக்கம் வெற்றுள்ளார். இவரது கதையை அறிந்த, மும்பையைச் சேர்ந்த டார்ஃப் கெடல் கெமிக்கல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Dorf Ketal Chemicals India Pvt Ltd) என்ற ரசாயனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், இந்த விளையாட்டு வீரருக்கான கௌரவத்தை வழங்க முன்வந்துள்ளது.இது குறித்து அக்ஷய், “இந்தப் பொருளாதார உதவி மிகவும் உற்சாகமூட்டுகிறது. இனி எனது காலைநேர பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, செய்தித்தாள் போடுவதற்காக ஓட வேண்டியிருக்காது. இன்னும் பெரிய சாதனைகளைச் செய்து, நாட்டிற்குப் பெருமை சேர்க்க முயல்வேன். இனி உலகளாவிய போட்டிகளே என் இலக்கு” என்று சொல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !