ஒற்றைக் கொம்பு வீரன்
'காண்டா' என்னும் சொல்லுக்கு மிகப்பெரிய என்று பொருள். காண்டாமிருகங்களில் இரண்டு ஆப்பிரிக்க வகைகளும், மூன்று ஆசிய வகைகளும் உள்ளன. ஆப்பிரிக்கா, இந்தியாவின் வட கிழக்குப் பகுதி, நேபாளம், பூட்டான், ஜாவா, சுமத்ரா தீவுகள், இமயமலை போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியா, ஜாவாவில் வசிப்பவை ஒற்றைக் கொம்பு உடையவை.தென் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் ஒற்றைக் கொம்பு உடைய வெள்ளை காண்டாமிருகங்கள் மிகப் பெரியவை. உலகில் அருகிவிட்ட விலங்கினங்களில் இதுவும் ஒன்று.பெரிய உடல், சிறிய கழுத்து, பரந்த மார்பு இதுவே இதன் அடையாளம். உடல் வழுவழுவென்று மினுமினுப்பான தோலுடன் காணப்படும். வாய் அகலமாக பெரிய உதடுகளுடன் சதுர வடிவில் இருக்கும். பசும்புல், இலை, தழை, கிழங்கு போன்றவற்றை இவை உண்கின்றன. இவற்றின் உடலில் உள்ள பேன், உண்ணி ஆகியவற்றின் தொல்லையிலிருந்து தப்பிக்க சேற்றில் படுத்துப் புரள்கின்றன. கூர்மையான மோப்பத் திறன், துல்லியமான செவித்திறன் உடையவை. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். எதிரிகளைத் தாக்கவும், மணல் பகுதிகளில் தோண்டி நீரை வர வைக்கவும் கொம்பு உதவுகிறது. கொம்பு உடைந்தால் மீண்டும் வளரக்கூடியது.விலை மதிப்புமிக்க இவற்றின் கொம்புகளுக்காக, மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.காண்டாமிருகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் பல நாடுகளில் காண்டாமிருகத்தை வேட்டையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை காண்டாமிருகம் என்று குறிப்பிடப்பட்டாலும் இவற்றின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். தரையில் வாழும் விலங்குகளில் யானைக்கு அடுத்தபடியாக இந்திய காண்டாமிருகமும் நீர் யானையும்தான் உலகிலேயே எடை மிகுந்தவை. வெள்ளை மூக்குக் கொம்பன்ஆங்கிலப் பெயர்: 'ஒயிட் ரினோசரஸ்' (White Rhinosarus)உயிரியல் பெயர்: 'செராட்டோதெரியம் சிமம்' (Ceratotherium Simum)குடும்பம்: 'ரினோசெரோட்டிடே' (Rhinocerotidae)நீளம்: 14 அடிஉயரம்: 6 அடிகொம்பின் நீளம்: 3 அடிவாலின் நீளம்: 2.5 அடிஆயுட்காலம்: 60 ஆண்டுகள்எடை: ஆண்: 2,300 கிலோ பெண்: 1,700 கிலோ