வருகிறது சிவப்பு நிலா
21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் இம் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கப் போகும் இந்தக் கிரகணத்தின்போது, நிலவு சிவப்பு நிறத்திற்கு மாறும். இந்நிகழ்வு சிவப்பு நிலவு கிரகணம் (Blood Moon Eclipse) என்று அழைக்கப்படும்.ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இதைப் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின்போது, நிலவு பூமியின் நிழலால் மறைக்கப்படும் தருணங்களை வெறும் கண்களால்கூட பார்க்கலாம். தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது, நிலவின் நிற மாறுதலை இன்னமும் துல்லியமாகக் கண்டு களிக்கலாம்.