உள்ளூர் செய்திகள்

செல்பி மோகம்: மீண்டும் ஒரு மரணம்

மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கோருமாரா தேசியப் பூங்கா பிரபலமான சுற்றுலா தலம். இருதினங்களுக்கு முன், இப்பூங்காவின் சுற்றுப்பாதையில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை கடந்துபோவதற்காகக் காத்திருந்தனர். அச்சமயத்தில், சாதிக் என்பவர் யானையுடன் செல்பி படம் எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக யானை தாக்கியதில் சாதிக் மரணமடைந்தார்.நாடு முழுவதும் செல்பி மோகத்தால் இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாக இருக்கிறது. இதன் காரணமாகவே, ரயில் நிலையங்களில் செல்பி படம் எடுத்தால் அபராதம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !