உள்ளூர் செய்திகள்

வானமே எல்லை

ஒளி ஆண்டு (Light Year): வானியலில் தொலைவுகளை அளப்பது என்பது பிரமாண்டமானது. நம் கற்பனைக்கு எட்டாத அந்தத் தொலைவுகளை 'ஒளி ஆண்டு' என்பதைக்கொண்டு குறிப்பிடுகிறார்கள். ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடப் பயன்படுவது. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 கிலோ மீட்டர்கள். சுமாராக, 3 லட்சம் கிலோ மீட்டர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஓர் ஆண்டில் ஒளி எவ்வளவு தொலைவு பயணித்திருக்கும் என்பதுதான் 'ஒளி ஆண்டு'. ஒளி வேகம்கேலக்ஸி - 1 வருடத்திற்கு = 25,902,068,371.20 x 365.242 = 9,460,523,256,033.83 கி.மீ.மார்ஸ் - 1 மணிக்கு = 17,987,547.48 x 60 = 1,079,252,848.80 கி.மீ.நிலா - 1 நொடிக்கு = 299,792.458 கி.மீ.சூரியன் - 1 மணிக்கு = 17,987,547.48 x 60 = 1,079,252,848.80 கி.மீ.புரோஷியா - 1 நாளைக்கு = 1,079,252,848.80 x 24 = 25,902,068,371.20 கி.மீ.* 9.46 டிரில்லியன் (Trillion) கி.மீ. -- ஓர் ஒளி ஆண்டு தூரம். (ஆயிரம் பில்லியன் = டிரில்லியன், அதாவது ஒன்றுக்குப் பின்னால் 12 பூச்சியங்கள்!)* சூரியன் - பூமி ஆகியவற்றின் மையப்பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரம் - ஒரு வானவியல் அலகு (Astronomical Unit - AU)* 1 வானவியல் அலகு = 149,597,871 கி.மீ.* சூரிய ஒளி பூமிக்கு வந்து சேர 8.3 நிமிடங்கள் * எனவே 1 வானவியல் அலகு = 8.3 ஒளி நிமிடங்கள் எனவும் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !