நீர் சூழ் உலகு!
'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர், அதைப் பல்வேறு வகைகளில் சேமித்தனர். அந்த சேமிப்பு இடங்களுக்கு, பல பெயர்களைச் சூட்டினர். அவர்கள் நீரைச் சேமித்த முறைகள், பாதுகாத்த வகைகள் கீழே:நீர் தேங்கும் இடங்களும் அதன் பெயர்களும்:தானே உருவான நீர்நிலைகள்: 'சுனை, பொய்கை, ஊற்று'மழைநீரைச் சேகரிக்கும் சிறிய பகுதி: 'குட்டை' குளிப்பதற்குப் பயன்படுவது: 'குளங்கள்'; 'செறு' என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்குடிக்கப் பயன்படும் நீர்: 'ஊருணி, கிணறு'உழவுத் தொழிலுக்குப் பயன்படும் நீர்: 'ஏரி'மழை நீர் மட்டும் தேங்கி நிற்கும் நீர்நிலை: 'ஏந்தல்' கூவ நூல்கிணறு தோண்டுவது பற்றிக் குறிப்பிடும் நூல் ஒன்று, பழங்காலத்தில் இருந்துள்ளது. அதற்கு 'கூவ நூல்' என்று பெயர். எந்த இடத்தில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பது போன்ற சாஸ்திரங்களை உள்ளடக்கிய நூல் இது. இதே போன்றதொரு நூல், வடமொழியில், 'கூப சாத்திரம்' என்ற பெயரில் இருந்துள்ளது.'கூவல் குறைவின்றித் தொட்டான் மிகுபுகழ் பெறுவான்' என்கிறது திரிகடுகம் (16-3).நீர் ஆதாரமான கிணற்றைத் தோண்டி வைத்தவர், இறந்தும் இறவாப் புகழைப் பெறுவர் என்று இந்நூல் கூறுகிறது.வாய்க்கால்ஆறு, அணை, குளம், ஏரி, ஏந்தல், வாய்க்கால், கிணறு ஆகிய நீர்நிலைகள் இருந்துள்ளன. நீர்த்தேக்கங்களிலிருந்து குமிழி, தூம்பு, மடை, மதகு, கண், வாய், துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைந்தது. வாய் என்பது மதகு. நீர் பாய்ந்தோடுவது, 'கால்'. வாயிலிருந்து செல்லும் நீர் ஆகையால் அதற்கு 'வாய்க்கால்' என பெயர் வந்தது.