கடந்த வாரம் உலகம்: என்ன நடந்தது?
ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி சரியான விடையை முயற்சிசெய்து கண்டுபிடியுங்கள்.1. அயோத்யா வழக்கில் எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்புச் சொன்னது?அ. 1ஆ. 3இ. 7ஈ. 52. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய சிவசேனை எம்.பி.யின் பெயர் என்ன?அ. உத்தவ் தாக்கரேஆ. வேணுகோபால்இ. அரவிந்த் சாவந்த்ஈ. தேவேந்திர ஃபட்நவிஸ்3. எந்த மாநிலத்தில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது?அ. குஜராத்ஆ. டில்லிஇ. பீகார்ஈ. மேற்கு வங்கம்4. மறைந்த டி.என். சேஷன் எந்தப் பதவியில் இருந்து புகழ்பெற்றவர்?அ. தலைமைத் தேர்தல் ஆணையர்ஆ. தலைமை இராணுவ ஜெனரல்இ. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்ஈ. தலைமை போஸ்ட் மாஸ்டர்5. எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?அ. கேரளம்ஆ. மத்தியப் பிரதேசம்இ. ஆந்திரம்ஈ. மகாராஷ்டிரம்6. நமது அண்டை நாடு ஒன்றில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. எந்த நாடு அது?அ. பூடான்ஆ. பாகிஸ்தான்இ. இலங்கைஈ. மியான்மர்7. கீழ்க்கண்டவற்றில் எந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது?அ. தென் கொரியாஆ. ஜிம்பாப்வேஇ. பிரான்ஸ்ஈ. இந்தோனேசியா8. ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஜனநாயகப் போராட்டத்துக்குப் பெயர் என்ன?அ. பிளாசம் எவ்ரிவேர்ஆ. பை பை சீனாஇ. நீதிவேண்டி போராட்டம்ஈ. கேப்சர் அமெரிக்கா9. BRICS என்பது எந்தெந்த நாடுகளைக் குறிக்கும்?அ. பிரிட்டிஷ், ருமேனியா, ஈரான், காங்கோ, தென் அமெரிக்காஆ.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்காஇ. பொலிவியா, ருவாண்டா, இந்தோனேசியா, கம்போடியா, சௌதி அரேபியாஈ. பெல்ஜியம், ருவாண்டா, ஈராக், கனடா, சுரினாம்10. நவம்பர் 14, என்ன நாளாக அனுசரிக்கப்பட்டது?அ. உலக முதியோர் தினம்ஆ. உலக ஒவ்வாமை தினம்இ. உலக நீரிழிவு தினம்ஈ. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்விடைகள்:1. ஈ, 2.இ, 3.ஆ, 4.அ, 5.ஈ 6.இ 7.ஆ 8.அ, 9.ஆ, 10. இ