உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் - எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்?!

உதவிக்காக, திறந்தவெளி உறக்கம்உலகம் முழுவதும், வரும் டிசம்பர் 7ஆம் தேதி 'World's Big Sleep Out' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேர் வீடின்றி தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போன்று உலகம் முழுவதும் வீடின்றி வாழ்வோர் மீதான கவனத்தை ஈர்க்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியை Social Bite என்ற நிறுவனம் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஸ்மித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள், அன்றைய இரவு, வீடற்றோருடன் சேர்ந்து தெருக்களில் இரவைக் கழிக்க உள்ளனர். இதன் மூலம் ஒரு கோடி டாலர் நிதிதிரட்டி, அதை வீடற்றோரின் நலனுக்காகச் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில், சென்னை உள்ளிட்ட 30 நகரங்களில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பைக் திருவிழா!பைக் பிரியர்களுக்கும், நீண்டதூர பயணங்களை விரும்புவோர்களுக்கும் குதூகலம் அளிக்கும் திருவிழாவாக, 'இந்திய பைக் வாரம்' டிசம்பர் 6,7ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இதில் கலந்துகொள்ள ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் பைக் பிரியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வாக சர்வதேச அளவில் இது பிரபலமாகி வருகிறது. விதவிதமான மோட்டார் சைக்கிள்களைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், அதை ஓட்டுபவர்களின் அனுபவத்தைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சாகச நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !