உள்ளூர் செய்திகள்

இந்த வாரம்!

சன்பர்ன் விழா!டிச. 27 - 29உலகளவில் டுமாரோலேண்ட், அல்ட்ரா ஆகிய இசை விழாக்களுக்கு அடுத்து பெருமளவிலான மக்கள் கூடும் இசை விழா இது. இடிஎம், பாப் ஆகிய இசை வகைகள் இந்த இசை விழாவின் முக்கியமான அம்சமாகும். மார்டின் காரிக்ஸ், ஆஃப்ரோஜாக், டிமிட்ரி வேகாஸ், லைக் மைக் ஆகிய பிரபலமான இசைக்குழுக்கள் பங்கேற்கிறார்கள்.பௌஸ் திருவிழா!டிச. 24 - 26ஆண்டுதோறும் மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதனில் நடைபெறும் பௌஸ் திருவிழா, நாடோடிப் பாடல்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கானது. பௌல்(baul) எனும் இசைவடிவம் இங்கு விமரிசையாகப் பாடப்படுகிறது. பழங்குடி மக்களின் நடனம், பாடல்கள் என மக்களின் பங்களிப்பால் அமர்க்களப்படுகிறது விழா.தெரு உணவு திருவிழா!டிச. 25 - 26இந்தியத் தலைநகரான புது டில்லியில், ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் தெரு உணவுகளைக் கொண்டாடும் விழா இது. தேசிய தெரு உணவு சங்கம், இந்த விழாவை 11வது ஆண்டாக ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்தியா முழுக்க உள்ள பல்வேறு சுவையான தெரு உணவுகள் இங்கு அணிவகுக்க இருக்கின்றன. மாமல்லபுர நாட்டிய விழா!டிச.25 - ஜன.25சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டிய விழா. இந்தியா முழுக்க உள்ள பரத மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா, மாதம் முழுவதும் நடைபெறுகிறது. சிற்பங்களின் பின்னணியில் நடைபெறும் பாரம்பரிய நடனங்கள் மக்களின் மனத்தை கொள்ளை கொள்வது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !